ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல் - 3 பேர் பலி

ஸ்காட்லாந்தில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடந்த பகுதி
தாக்குதல் நடந்த பகுதி
Published on

எடின்பர்க்:

ஸ்காட்லாந்தின் கிலாஸ்கோ நகரில் ஸ்டெர்வெல் என்ற சொகுசு ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இன்று தங்கள் வழக்கமான வேலையில்  ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஹோட்டலுக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன் அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்தினான்.

இதனால், அந்த ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தனர். அப்போது மர்ம நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். 

ஆனாலும், மர்ம நபர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 21 ஆம் தேதி இங்கிலாந்திலும் இதே போன்று பூங்காவில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com