சவுகார்பேட்டை, பாரிமுனையில் புகையிலை விற்ற 3 பேர் கைது

சவுகார்பேட்டை, பாரிமுனையில் போலீசார் நடத்திய சோதனையில் புகையிலை விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சவுகார்பேட்டை, பாரிமுனையில் புகையிலை விற்ற 3 பேர் கைது
Published on

சென்னை:

சவுகார்பேட்டை, என்.எஸ். சி. போஸ் சாலையில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா விற்கப்படுவது தெரிந்தது. இதையடுத்து புகையிலை விற்ற சவுகார்பேட்டையை சேர்ந்த தீபக்கை கைது செய்தனர்.

இதே போல் பூக்கடை பந்தர் தெருவில் குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பான் மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து ஜாகீர் உசேனை கைது செய்தனர். மைலாப்பூர் பஜார் சாலையில் உள்ள கடையில் புகையிலை விற்ற நாராயண பெருமாள் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com