பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மூன்று பெண்கள் கைது

லாகூர் நகரில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மூன்று பெண்கள் கைது
Published on

இஸ்லாமாபாத்:

லாகூர் நகரில் அமைந்து பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தின் பேஸ்புக்கிற்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடப்பட்டன. அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என உளவுத்துறை அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மிலான் அலி என்ற போலி பேஸ்புக் கணக்கின் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேஸ்புக் பயன்படுத்திய செல்போன் எண் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த செல்போன் எண் ஃபிடாயஸ் ரெகனா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஃபிடாயஸ் ரெகனா மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் ஆயிஷா, சுந்தாஸ் ஆகிய மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மூன்று பேரிடமும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மூவருக்கும் உதவியாக இருந்த உஸ்மான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com