சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டையில் படைவீரர்கள்
தேடுதல் வேட்டையில் படைவீரர்கள்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள சிந்தாநைர் காவல் நிலைய எல்லை அருகில் உள்ள தட்மேலா காட்டுப் பகுதியில் நக்சலைட்கள் சிலர் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நக்சல்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

இந்த தாக்குதலில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com