காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள வானி ஹமா கிராமப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று மாலை தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் நீண்ட நேரம் நடைபெற்ற சண்டையின் முடிவில் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அப்பகுதியில் வேறு யாரும் பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com