ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
என்கவுண்டர் நடந்த இடம்
என்கவுண்டர் நடந்த இடம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அவந்திபோரா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ மொகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com