பொதுமக்களை கொடூரமாக கடித்த நாய்- வைரலாகும் வீடியோ

டெல்லியின் உத்தம் நகரில் நாய் ஒன்று பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்களை கொடூரமாக கடித்த நாய்-  வைரலாகும் வீடியோ
Published on

புதுடெல்லி:

புதுடெல்லியின் உத்தம் நகரில் தெருநாய் ஒன்று சுற்றித்திரிந்து வந்துள்ளது. திடீரென இந்த நாய் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை தாக்கியது. நாயிடம் இருந்து தப்பிக்க அனைவரும் ஓடினர்.

அப்போது ஒரு சிறுவனை மட்டும் கொடூரமாக கடித்த நாயை அனைவரும் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நாய் சிறுவனை விட வில்லை. அங்கிருந்தவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் நாற்காலி கொண்டு நாயை தாக்கினர். இதையடுத்து நாய் சிறுவனை விட்டுவிட்டு மற்றவர்களை தாக்க தொடங்கியது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து மாநாகராட்சி அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. வெறிப்பிடித்த நாயை அவர்கள் பிடித்து சென்றனர். தெருவில் நின்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com