திருப்பத்தூர் பகுதியில் 3 சிறுமியின் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பத்தூர் பகுதியில் 3 சிறுமியின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
சிறுமி திருமணம் நிறுத்தம்
சிறுமி திருமணம் நிறுத்தம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூரை அடுத்த திருமால்நகர் பகுதியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக கலெக்டர் சிவன்அருளுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திருமால்நகர் பகுதிக்கு சென்று விசாரித்தனர். அதில் 16 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதேபோல் கந்திலி அருகே உள்ள கும்மிடிகான்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் கவுண்டப்பனூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அங்கு சென்ற 18 வயது ஆன பின்னர்தான் திருமணம் நடத்த வேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com