குஜராத்: அரபிக்கடலில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் பலி

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட அரபிக்கடலில் இன்று படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன ஒருவரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட கிர் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள்  3 படகுகள் மூலம் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

ராஜபாரா துறைமுகம் அருகே  மீன்பிடித்து கொண்டிருந்தபோது வேகமாக வீசிய பேரலைகளில் சிக்கி படகுகள் கவிழ்ந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல், தேவ்பூமி துவாராகா அருகே அரபிக்கடலில் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் ஒரு படகு கவிழ்ந்ததில் மற்றொரு மீனவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மொத்தம் 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீட்புப் படையினரால் 18 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com