

திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் காட்டாற்றில் 3 சிறார்கள் குளிக்க சென்றனர். அப்போது காட்டாற்றில் குளித்த அசிரா பானு (11), ஆசிக் (7), ரிஜிவானா (10) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
3 சிறார்கள் காட்டாற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.