

போபால்:
மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் பான்மோர் நகரில் ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.மை உடைத்த கொள்ளையர்கள் ரூ.5 லட்சத்தை திருடிச் சென்றனர். அதே கும்பல், ஒரு பொதுத்துறை வங்கி ஏடி.எம்.மில் ரூ.29 லட்சத்தை கொள்ளையடித்தது.
அண்டை மாநிலமான ராஜஸ்தானின் தவுல்பூர் மாவட்டத்தில் அந்த கும்பல் ஒரு ஏ.டி.எம்.மை உடைத்து ரூ.8 லட்சத்தை திருடியது. இந்த கொள்ளை சம்பவங்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்துள்ளது.
கண்காணிப்பு கேமரா மீது கருப்பு மை தெளித்து விட்டு, கேஸ் கட்டர்களால் ஏ.டி.எம்.மை உடைத்து, கொள்ளையை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் டெல்லிக்கு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.