மதுரையில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது

மதுரையில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை தல்லாகுளம் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் மைதீன் பாதுஷா (வயது 39), ஆட்டோ டிரைவர். இவருக்கும், சிலருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டு முன்பு மைதீன் பாதுஷா அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர்.

அவர்கள் மைதீன் பாதுஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென கைகலப்பும் ஏற்பட்டது. 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியதில்,மைதீன் பாதுஷா காயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதல் குறித்து விசாரணை நடத்தினர். மைதீன் பாதுஷாவை கத்தியால் குத்தியதாக ஜோதிபாசு (18), வேல் முருகன் (18), பொன்னுப்பாண்டியன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com