

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா-கட்வேல் மாவட்டத்தில் உள்ள பீச்சுபல்லி பகுதியில் இன்று கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
கர்னூல் நோக்கி சென்று கொண்டிருந்த பொலீரோ காரின் மீது சரக்கு லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.