தொப்பம்பட்டி பகுதியில் சிவப்பு பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

தொப்பம்பட்டி பகுதியில் சிவப்பு பூசணி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தொப்பம்பட்டி பகுதியில் சிவப்பு பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
Published on

சத்திரப்பட்டி:

திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, தாசரிபட்டி புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கொத்தயம், தேவத்தூர், 16-புதூர் ஆகிய ஊர்களிலும் ஏராளமான விவசாயிகள் சிவப்பு பூசணி நடவு செய்துள்ளனர்.

தற்போது இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்து வருவதால் பூசணி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ சிவப்பு பூசணி ரூ.8 முதல் ரூ.9 வரை மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது சிவப்பு பூசணி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com