தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதலாவது யூனிட் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiPowerPlant #Boilerrepair
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்குள்ள யூனிட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அவை சமீபகாலமாக அடிக்கடி பழுதாகி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இங்குள்ள யூனிட்டுகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இன்று முதலாவது யூனிட் எந்திரத்தின் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் 1-வது யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 4-ம் தேதி முதலாவது யூனிட்டின் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiPowerPlant #Boilerrepair

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com