தூத்துக்குடி அனல்மின் நிலைய 5-வது யூனிட் பழுது சரி செய்யப்பட்டது

தூத்துக்குடி அனல்மின் நிலைய 5-வது மின் உற்பத்தி யூனிட்டில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடி அனல்மின் நிலைய 5-வது யூனிட் பழுது சரி செய்யப்பட்டது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல்மின் நிலையம் கடந்த 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி யூனிட்டுகள் இங்கு இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

இங்குள்ள 5 யூனிட்டுகளுமே மிகவும் பழமையானவை என்பதாலும், நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை தாண்டி இயங்கி வருவதாலும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 5-வது மின் உற்பத்தி யூனிட்டின் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து என்ஜினீயர் குழுவினர் 5-வது மின் உற்பத்தி யூனிட்டில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து இரவில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நடந்தது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com