டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக முத்தையாபுரம் பேரின்பநகரை சேர்ந்த சுகுமார்(வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். பின்னர் அவர், நேற்று முன்தினம் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் உள்ளே சென்று பார்த்தாராம்.

அப்போது, கடையில் இருந்த ரூ.22 ஆயிரத்து 560 மதிப்பிலான 46 மதுபாட்டில்களை யாரோ மர்மநபர் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுகுமார் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com