தொண்டி அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

தொண்டி அருகே வாலிபரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் இன்று மதியம் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தொண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள முகில்தகம் முத்தமிழ் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் அஜித்குமார் என தெரியவந்தது.

டிரைவரான இவரை மர்ம நபர்கள் அரிவாளால் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com