தொண்டாமுத்தூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் தகராறு- 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தொண்டாமுத்தூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் குளத்துப்பாளையம், தளியூர், காளியண்ணன்புதூரை சேர்ந்த வாலிபர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று கிரிக்கெட் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிலர் தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 22), காளியண்ணன் புதூரை சேர்ந்த ஆதி (23) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com