தொண்டாமுத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை

தொண்டாமுத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை
Published on

கோவை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துபாளையம் கீதாஞ்சலி நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 34). கூலித் தொழிலாளி. வேலைக்கு செல்லும் சதீஸ்குமார் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சதீஸ்குமார் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சதீஸ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சதீஸ்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com