பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

தோகைமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே குள்ளம்பட்டியில் தரிசுக்காட்டில் பணம் வைத்து சூதாடுவதாக தோகைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மேற்கண்ட பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அருண் (வயது 30), அருள் (27), பிச்சை (55), சங்கர் (34), ராமகிருஷ்ணன் (42), பாலசுப்பிரமணியன் (40) ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, ரூ.8,400 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com