

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 அரைசதங்களுடன் 218 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்ற ஷுப்மன் கில் மட்டும் இந்திய அணியிலிருந்து விடுபட்டுப் போனார்.
அவரை தவிர மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து ஷுப்மன் கில் கூறியதாவது:
ஆனால் இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டு இந்திய அணிக்கான தேர்வுக்குழுவை என் பக்கம் ஈர்ப்பேன். இதுதான் இனி எனது முக்கியமான குறிக்கோள்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் எனக்கு பெரிய பாடமாக அமைந்தது. நல்ல பந்துகளை தடுத்து விளையாடி கிரீசில் நீண்ட நேரம் நிற்பதன் முக்கியத்துவத்தை எனக்கு இந்த தொடர் கற்றுக் கொடுத்துள்ளது.