மென்பொருள் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரியும் 7ம் வகுப்பு மாணவன்

ஐதராபத்தில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் தரவு அறிவியலாளராக பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ள 7ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
சித்தார்த் ஸ்ரீவஸ்தாவ்
சித்தார்த் ஸ்ரீவஸ்தாவ்
Published on

ஐதராபாத்:

ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் சித்தார்த் ஸ்ரீவஸ்தவ். 12 வயதான இந்த சிறுவன் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறான். சிறு வயதிலே இருந்து தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்றவற்றில் ஆர்வம் உடைய சித்தார்த், மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளான்.

இது குறித்து சித்தார்த் கூறுகையில், ‘12 வயதிலேயே மென்பொருள் நிறுவனத்தில் தரவு அறிவியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பெரும் உத்வேகமாக இருந்தவர் தனது இளம் வயதிலேயே கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட தன்மய் பக்சிதான். மேலும் அது செயற்கை நுண்ணறியவியல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என உலகம் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

சிறுவயதிலிருந்தே எனக்கு கோடிங் எழுதுவதில் இருந்த ஆர்வத்தை என் தந்தை புரிந்து கொண்டு உதவினார்.  எனது அப்பா, எனக்கு கோடிங் குறித்து பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர். இன்று கிடைத்திருக்கும் அனைத்துக்கும் அவர்தான் காரணம்’ என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com