திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவன் மாயம்

திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவன் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுவனை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

திருவெறும்பூர்:

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சுருளி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ரித்தீஷ் என்கிற நித்திஷ் குமார் (வயது 11). இவன் பெல் வளாகத்திலுள்ள பள்ளியில்  5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் 27 -ந் தேதி மதியம் பள்ளியிலிருந்து பாதியிலேயே வீடு திரும்பியுள்ளான். அப்போது வீட்டில் இருந்த தந்தை ரமேஷ் மீண்டும் பள்ளிக்கு செல்லுமாறு கண்டித்து அனுப்பியுள்ளார்.  

ரித்தீஷ் மீண்டும் பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவன் பள்ளிக்கு செல்லவில்லை. அவனை பல இடங்களில்  தேடியும் கிடைக்காததால். அவரது தாய் முத்துமாரி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரீல் திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com