திருவெண்ணைநல்லூர் அருகே மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணைநல்லூர் அருகே மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
Published on

திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் மதுவிற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், அருணாசலம் தலைமையிலான போலீசார் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 35) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து அங்கிருந்த 1,632 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com