திருவெண்ணெய்நல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டம் கைது
சூதாட்டம் கைது
Published on

அரசூர்:

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமையிலான போலீசார் நேற்று சித்தலிங்கமடம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி (வயது 40), செல்லப்பன் (32), குமார் (37), ரமேஷ் (47), குரு (40) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2,760 மற்றும் 40 புள்ளித்தாள்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com