திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

திருவேங்கடம்:

திருவேங்கடத்தை அடுத்துள்ள கீழத்திருவேங்கடம் வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் மேடையாண்டி (வயது 87). இவர் தனது வீட்டில் இருந்து வயலுக்கு செல்ல சிவகாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சங்குப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் சக்திகுமார் (37) என்பவர் மேடையாண்டி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட மேடையாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த சக்திகுமார் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com