திருவாரூர் அருகே முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்தை குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகே முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை
Published on

திருவாரூர்:

கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பனை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 62). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகாலிங்கம் சரிவர சாப்பிடாமல் இருந்துள்ளார். அதனால் அவரது வயிற்றில் புண் ஏற்பட்டு வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக மகாலிங்கம் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவநாளன்று வயிற்றுவலி அதிகமாகவே வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து மகாலிங்கத்தின் மகன் செந்தில்குமார் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com