திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையம் திறப்பு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையத்தை கோபால் எம்.பி. திறந்து வைத்தார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையம் திறப்பு
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் எம்.பி. தொகுதி தொடர்பான தகவல் பரிமாற்ற மையத்தை நாகப்பட்டினம் டாக்டர்.கே.கோபால் எம்.பி. திறந்து வைத்தார். 

மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இம்மையத்தில் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் செயல்படுத்தப்படும் திட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். திட்டம் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விபரங்களும் அறியலாம். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மீனாட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட ஊரக முகமையின் செயற்பொறியாளர் வி.செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com