கலெக்டர் ஆனந்த்
கலெக்டர் ஆனந்த்

விவசாயத் தொழிலாளர்கள் தேவையை தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை- திருவாரூர் கலெக்டர் தகவல்

விவசாய தொழிலாளர்கள் தேவையினைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரக கட்டுபாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விவசாய தொழிலாளர்கள் தேவையினைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரக கட்டுபாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் 9738 எக்டேரிலும், பருத்தி 8029 எக்டேரிலும், முன்பட்ட குறுவை 2500 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில், கோடை நெல் பால் பிடிக்கும் பருவத்திலும், பருத்தி வளர்ச்சிப்பருவத்திலும், முன்பட்ட குருவை வளர்ச்சிப்பருவத்திலும் உள்ளது.

விவசாயப் பணிகள் மும்முரமாக நடந்து வரும் இக்காலக் கட்டத்தில் தங்கள் கிராமங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் தேவை ஏற்பட்டாலோ, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் இயக்கம் குறித்து, ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com