திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ப்பணம் செய்து விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது போல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட உழவர் பேரவை விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புருஷோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது அரிசியை குவித்து வைத்து அதில் கும்பம் வைத்து மஞ்சள், குங்குமிட்டு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து போல அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சரியாக நடக்கவில்லை. ஊழல் நடந்திருப்பதாக கூறி கோ‌ஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com