திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை - பெண்கள் உள்பட 37 பேர் கைது

திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை செய்த பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 638 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை - பெண்கள் உள்பட 37 பேர் கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் சிலர் விதிகளை மீறி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில் பதுக்கி விற்ற 8 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 638 மதுபாட்டில், ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com