திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகள் பூஜா (20). திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 20-ந் தேதி கல்லூரிக்கு சென்ற பூஜா, பின்னர் திரும்பி வரவில்லை. மாயமான அவரை செவ்வாப்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த வயலாநல்லூரை சேர்ந்தவர் நாகேந்திரன் மகள் லூயிசா (17). வேலப்பன்சேரியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 20-ந் தேதி தேர்வு எழுத சென்ற லூயிசா திரும்பி வரவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியபாளையத்தை அடுத்த சின்னசெங்காத்தா குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் சிவகாமி (13).

நேற்று மாலை சிவகாமி அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை யாரேனும் கடத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com