திருவையாறில் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்

திருவையாறில் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவையாறில் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
Published on

திருவையாறு:

திருவையாறு அடுத்த காட்டுக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி தீபா (வயது 32) இவர் தனது 5 பவுன் நகையை அடகு வைக்க ஊரிலிருந்து ஒருபையில் எடுத்துக்கொண்டு குழந்தையுடன் கண்டியூரிலிருந்து பஸ் ஏறி திருவையாறு வந்துள்ளார்.

திருவையாறு பஸ் நிலையத்தில் இறங்கி பார்க்கும்போது பையிலிருந்த நகையை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் 1.5 லட்சமாகும். இதுகுறித்து திருவையாறு போலீசில் தீபா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

X

Maalai Malar
www.maalaimalar.com