திருத்தணி அருகே மரத்தில் பஸ் மோதல்: 2 மாணவர்கள் படுகாயம்

திருத்தணி அருகே மரத்தில் பஸ் மோதியதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

திருத்தணி:

திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள பள்ளியில் கன்னிகாபுரத்தை சேர்ந்த சந்துரு 10-ம் வகுப்பும், வெங்கடாபுரத்தை சேர்ந்த விக்ரம் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இன்று காலை அவர்கள் திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல தனியார் பஸ்சில் பயணம் செய்தனர்.

அகூரை அடுத்த நத்தம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர மரத்தில் மோதியது. இதில் மாணவர்கள் சந்துரு, விக்ரம் படுகாயம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com