திருத்துறைப்பூண்டி அருகே லாரி மோதி வாலிபர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே தேளிக்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரையன் மகன் மகேஷ் (வயது 18). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களை காண மோட்டார் சைக்கிளில் நெடும்பலம் ஈ.சி.ஆர். ரோட்டில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியதில் மகேஷ் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த அவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com