திருப்பத்தூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் கொள்ளை

திருப்பத்தூரில் பஸ்சில் வந்த சென்னை பெண்ணிடம் 9 பவுன் தங்க நகைகள் ரூ.60 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

திருப்பத்தூர்:

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் தயாநிதி (வயது45) ரெயில்வே ஊழியர் இவருடைய மனைவி விஜயலட்சுமி.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து அரசு பஸ்சில் சென்னைக்கு பயணம் செய்தார். அப்போது அவரது பையில் 9 பவுன் தங்க நகைகள் ரூ.60 ஆயிரம் பணம் வைத்திருந்தார்.

பஸ் திருப்பத்தூர் வந்த போது பையில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது இதனால் திடுக்கிட்ட விஜயலட்சுமி இதுபற்றி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com