திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா ஏரிக்கோடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தேசிகன் (வயது 7). புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது முட்புதரில் இருந்து வந்த பாம்பை கவனிக்காத தேசிகன் பாம்பை மித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவனது காலில் பாம்பு கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த அவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டான். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com