தற்கொலை
தற்கொலை

திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

ஆவடி:

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் கலைச்செல்வி (வயது 19). இவருக்கு அடிக்கடி வலிப்பு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை கலைச்செல்வியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி, திடீரென வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com