திருநின்றவூர் அருகே குடிநீர் வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

திருநின்றவூர் அருகே குடிநீர் வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆவடி:

திருநின்றவூர் அடுத்த பாக்கம் சம்பந்தம் நகரை சேர்ந்தவர் அருள். இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் ஜூனியர் அக்கவுண்டன்ட் ஆக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு நிர்வாக காரணங்களுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் இருந்து திருவொற்றியூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com