

சென்னை:
விஜயதாரணி எம்.எல்.ஏ. ஜெயலலிதா படத்திறப்புக்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் சபாநாயகர், துணை முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை புறக்கணிப்பது என்பது கூட்டணி கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எடுத்த முடிவு. இந்த முடிவு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. கட்சி முடிவின்படி விஜயதாரணியும் நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கிறார்.
மற்றபடி அவர் சபாநாயகர், துணை முதல்வரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளதாக வெளி வந்துள்ள கருத்துக்கள் பற்றியும் முழுமையாக தெரிந்து ஆய்வு செய்து அதன்பிறகு எனது கருத்தை தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.