ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குமரி அனந்தனை சந்தித்தார் திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பிற்பகலில் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குமரி அனந்தனை சந்தித்தார் திருநாவுக்கரசர்
Published on

சென்னை:

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று பிற்பகலில் சந்தித்தார். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். குமரி அனந்தனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் திருநாவுக்கரசர் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com