திருமுருகன்காந்தி ஜாமீன் மனு தள்ளுபடி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருமுருகன்காந்தி ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

சென்னை:

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.

நார்வேயிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமுருகன்காந்தியை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்து, மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், திருமுருகன்காந்தி ஜாமீன் கேட்டு கீழ் கோர்ட்டை அணுகி, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். #ThirumuruganGandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com