திருமுல்லைவாயல் அருகே வாலிபர் தற்கொலை

திருமுல்லைவாயல் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆவடி:

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ரவிக்குமார் அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டையில் உள்ள தனியார் பெல்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவிக்குமாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com