திருமுல்லைவாயல் அருகே காரில் கடத்திய செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருமுல்லைவாயல் அருகே காரில் கடத்திய செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
செம்மரக்கட்டைகள்
செம்மரக்கட்டைகள்
Published on

ஆவடி:

திருமுல்லைவாயல் அருகே பொத்தூர் காலனியில் சாலை ஓரத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று ஒலி எழுப்பியவாறு நீண்ட நேரம் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆவடி சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் சத்தியமூர்த்தி, திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு கேட் பாரற்று நின்ற காரின் இருக்கைகளுக்கு கீழ் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 8 செம்மரகட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் வருவதை அறிந்ததும் செம்மரக்கட்டைகளை கடத்திய மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க காரின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com