திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
Published on

திருப்பூர்:

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக முதல்-அமைச்சர் ஆணையின்படி இன்று முதல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை வட்டத்தில் 27,446 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 7,492 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 8,395 ஏக்கரும், பல்லடம் வட்டத்தில் 7,887 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 11,309 ஏக்கரும், காங்கயம் வட்டத்தில் 15,392 ஏக்கர் என மொத்தம் 77,921 ஏக்கரும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் 12,567 ஏக்கரும், சூலூர் வட்டத்தில் 4,033 ஏக்கர் என 16,600 ஏக்கரும் என திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சார்ந்த 94,521 ஏக்கர் பாசனப்பரப்பு பயன்பெறும் வகையில் நான்கு சுற்றுகளாக மொத்தம் 7,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான வினாடிக்கு 912 கன அடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் தமிழக அரசால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், திருமூர்த்தி அணை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை, அசோக் பாபு,திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் மனோகரன், உதவி பொறியாளர் சண்முகம், ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை தாசில்தார் தயானந்தன், மடத்துக்குளம் துரையரசன், கொழுமம் தாமு மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com