திருமழிசை அருகே 10-ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

திருமழிசை அருகே 10-ம் வகுப்பு மாணவியை தினமும் பின்தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருமழிசை அருகே 10-ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
Published on

செவ்வாப்பேட்டை:

திருமழிசையை அடுத்த திருமணம் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

இவரை அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரதீப் (வயது 23) ஒருதலையாக காதலித்தார். இவர் தினமும் மாணவியை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி மறுத்தும் பிரதீப் விடவில்லை. அவரை தினமும் தொந்தரவு செய்தார்.

இதுபற்றி மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com