திருமாவளவன் பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகம்: வி.சி. கட்சியினர் வழங்கினர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி 50-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், உபகரண ங்கள் வழங்கப்பட்டன.
திருமாவளவன் பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகம்: வி.சி. கட்சியினர் வழங்கினர்
Published on

கரூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி கரூர் வெங்கக்கல்பட்டி திருமா நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வக்கீல் மன்னன் தலைமை தாங்கினார்.

சட்ட மன்றதொகுதி செயலாளர் செல்வப்பெருந்தகை வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், மாநில துணை செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட அமைப்பாளர் கண்மணி ராமச்சந்திரன் , துணை அமைப்பாளர் வக்கீல் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100- க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், உபகரண ங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பசுவை ரஞ்சித், சுந்தரவடிவேல், விசுவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆ. பாபு நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com