திருமங்கலம் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆசிரியையிடம் நகையை பறித்து சென்றனர். #jewelrysnatch
திருமங்கலம் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு
Published on

பேரையூர்:

திருமங்கலம் சிதம்பரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் விஜயலட்சுமி (வயது29), தனியார் பள்ளி ஆசிரியை.

சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் விஜயலட்சுமி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கூச்சலிட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் மறைந்து விட்டனர்.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com