திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வக்கீல் பலி

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வக்கீல் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வக்கீல் பலி
Published on

பேரையூர்:

திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் மருதுபாண்டி (வயது34). இவர் பேரையூர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலையில் மதுரையில் அலுவலகப்பணி காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் பேரையூர் வந்து கொண்டிருந்தார்.

கப்பலூர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மருதுபாண்டி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கீழே விழுந்த மருதுபாண்டியன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கப்பலூரைச் சேர்ந்த ராசு மகன் லோகநாதன் (22), சிவகாசி அரசரடி காலனியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் மாரீஸ்வரன் (28) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com